search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரம் அரசு பள்ளி"

    ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் நடராஜன் தலைமையில், அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் நடராஜன் தலைமையில், அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். அந்த வகையில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2018-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின் படி மாணவ, மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் ராமநாதபுரம் மாவட்டம், 12-ம் வகுப்பில் மாநில அளவில் நான்காமிடமும், 10-ம் வகுப்பில் மாநில அளவில் 5-ம் இடமும் பெற்றுள்ளது.

    இது 2017-ம் ஆண்டு முடிவுகளை ஒப்பிடுகையில் சற்று பின்னடைவான சூழ்நிலையாகும்.

    இதனை சரிசெய்திடும் வகையில் ஆசிரியர்கள் அர்ப் பணிப்பு உணர்வுடன் பணியாற்றி நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் முதன்மை மாவட்டமாக வர செய்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனையும், பாதுகாப்பினையும் உறுதி செய்வது கடமையாகும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைக்கான தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இத்தகைய அடிப்படை வசதியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்களிடத்தில் (வட்டார வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி) தகவல் தெரிவித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுதவிர, வகுப்பறைகள் இயங்கும் கட்டிடங்கள் பாதுகாப்பு தன்மை குறித்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். தேவைக்கேற்ப மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொண்டு சீர்செய்திட வேண்டும். அதேவேளையில் கட்டிடத்தின் உறுதித்தன்மை, மிகவும் மோசமாக இருப்பின், அது தொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு தலைமையாசிரியர்களின் தலையாய கடமையாகும்.

    மேலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு மாவட்டம் முழுவதிலும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பதை நூறு சதவீதம் உறுதி செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர், குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

    மேற்கண்டவாறு கலெக்டர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்பட அனைத்து அரசுப்பள்ளிகளின் தலை மையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×